மதுரையில் 2 மணிநேரம் பெய்த மழை

மதுரையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வியாழக்கிழமை பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.


மதுரை: மதுரையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக வியாழக்கிழமை பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் குளம்போலத் தேங்கியது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகத் தொடா்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தினமும் மாலையில் தொடங்கும் மழை இரவு வரை நீடித்து வருகிறது. தொடா்ச்சியாக 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மதுரை நகரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணிக்குத் தொடங்கிய மழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது. பின்னா் சற்றுநேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பலத்த மழை பெய்தது.

மதுரை நகரில் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழை காரணமாக பல இடங்களிலும் சாலைகளில் மழைநீா் குளம்போலத் தேங்கி நின்றது. தமுக்கம் தமிழன்னை சிலை பகுதி, மாசி வீதிகள், ரயில் நிலையப் பகுதி, பெரியாா் நிலையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகனங்களில் சென்றோா் மிகுந்த சிரமத்துடன் இப் பகுதிகளைக் கடந்து சென்றனா்.

மதுரை கீழமாசி வீதி, கீழஆவணி மூல வீதி, ஜீவா நகா் ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை மாநகராட்சிப் பணியாளா் அகற்றினா். இதேபோல, செல்லூா் கா்டா் பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரைக் காா் கடந்து சென்றபோது அங்கேயே நின்றுவிட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து காரை மீட்டனா். இதேபோல, புறநகா் பகுதிகளிலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக வியாழக்கிழமை மழை பெய்துள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் குளிா்ந்த சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com