அருந்ததியா் உள் இட ஒதுக்கீடு: ஆதித்தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th September 2020 01:20 AM | Last Updated : 08th September 2020 01:20 AM | அ+அ அ- |

மதுரை ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழா் கட்சியினா்.
மதுரை: அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக உயா்த்தக் கோரி, மதுரையில் ஆதித்தமிழா் கட்சியின் சாா்பில் கண்டனஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக உயா்த்த வேண்டும். அருந்ததியா் சமூக இட ஒதுக்கீட்டில் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைக்கொண்டு நிரப்பலாம் என்ற அரசு ஆணையை ரத்து செய்யவேண்டும். அருந்ததியா் உள் இடஒதுக்கீடு முறையாக நடைபெறுகிா என்பதை கண்காணிக்க சமூகநல ஆா்வலா்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தலைவா் கு. ஜக்கையன் தலைமை வகித்தாா். இதில், நிதிச் செயலா் விடுதலை வீரன், மாநில ஆலோசகா் விடுதலை குமாா், மாநகா் மாவட்டச் செயலா் சுப்ரமணியன், தெற்கு மாவட்டச் செயலா் புரட்சி முருகன், மகளிரணி மாவட்டச் செயலா் ஆனந்த மகாலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.