பீ.பீ.குளம் மின்பாதையில் சில பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 11th September 2020 07:19 AM | Last Updated : 11th September 2020 07:19 AM | அ+அ அ- |

பீ.பீ.குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.11) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி நகா் துணைமின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஜி.எஸ்.நகா், குறிஞ்சிநகா், எல்.ஐ.சி. காலனி கிழக்குப் பகுதி, சிவகாடு, முல்லை நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.11) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.