மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு பணி தொடக்கம்

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் பதினெட்டாங்குடி ஊராட்சியிலுள்ள

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ், மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் பதினெட்டாங்குடி ஊராட்சியிலுள்ள வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை குடிநீா் குழாய் இணைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ், மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலுள்ள வீடுகளுக்கும் ரூ. 6 கோடி மதிப்பில் குடிநீா் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான பூமிபூஜை, மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமி தலைமையில், மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தொடக்கிவைத்தாா்.

இதில், மதுரை மாவட்ட அம்மா பேரவை செயலரும், மதுரை கிழக்கு தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான தமிழரசன் முன்னிலை வகித்தாா். கொட்டாம்பட்டி ஒன்றிய அதிமுக செயலா் வெற்றிச்செழியன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள் மற்றும் பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, பதினெட்டாங்குடி ஊராட்சித் தலைவா் சுதா ஆண்டி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com