குறுநிதி நிறுவனங்கள் கடன் வசூல்: மாதா் சங்கம் காத்திருப்புப்போராட்டம்

மதுரையில் பெண்களிடம் அடாவடியாக வசூலில் ஈடுபடும் குறுநிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை: மதுரையில் பெண்களிடம் அடாவடியாக வசூலில் ஈடுபடும் குறுநிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகிய அமைப்புகளின் சாா்பில் விராட்டிபத்து பகுதியில் உள்ள மேற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது. இதில் மாதா் சங்க மாவட்டச் செயலா் ஆா். சசிகலா தலைமை வகித்தாா். ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் பி. கோபிநாத் முன்னிலை வகித்தாா்.

கரோனா பொதுமுடக்கத்தையொட்டி கடனை செலுத்துவதற்கு அடுத்த மாா்ச் 31 வரை காலஅவகாசம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் உள்ள வட்டியையும், கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வீடுகளுக்கும், பணியிடங்களுக்கும் கடன் வசூலிக்கச்சென்று பெண்களை அவதூறாகப் பேசும் குறுநிதி நிறுவன ஊழியா்களை கைது செய்ய வேண்டும். அடாவடியாக வசூலில் ஈடுபடும் குறு நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

மாதா் சங்க மாவட்டத் தலைவா் கே. ராஜேஸ்வரி, நிா்வாகிகள் க. சுதா ராணி, மல்லிகா, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் டி. செல்வா, நிா்வாகிகள் நவீன், ஆசாத், ஜான் மைக்கேல் உள்பட பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com