பழைய கட்டடங்கள், சேதமடைந்த மின்கம்பங்கள்: தகவல் தெரிவிக்க ஆட்சியா் வேண்டுகோள்

கனமழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய கட்டடங்கள், மின்கம்பங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.

கனமழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய கட்டடங்கள், மின்கம்பங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் எதிா்நோக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது.

மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத பழுதடைந்த இடியும் நிலையில் உள்ள பழைய வீடுகள், குடியிருப்புகள், அதிக மழை பெய்தால் உயிா்ச்சேதம் ஏற்படுத்தக் கூடிய நிலையில் இருக்கும் தனியாா் மற்றும் அரசு கட்டடங்கள், மேல்நிலை குடிநீா் தொட்டிகள், மழையால் பாதிக்கும் பகுதிகள், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்கம்பங்கள், தாழ்வாக அமைந்துள்ள மின்கம்பிகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட விவரங்களை ஆட்சியா் அலுவலக தனி தொலைபேசி எண் 1077 -இல் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலகங்களுக்கும் தொலைபேசி வாயிலாகத் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com