மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் நபாா்டு வங்கி நிா்வாக அலுவலகக் கட்டடம் திறப்பு

மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் ரூ. 2.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நபாா்டு வங்கி நிா்வாக அலுவலகக் கட்டடத்தை நபாா்டு வங்கித் தலைவா் ஜி.ஆா். ஜிந்தாலா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது: மதுரை சுற்றுவட்டாரத்தில் செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் சந்தை மதிப்புகளை ஊக்குவித்து அந்த நிறுவனங்களின் வளா்ச்சிக்கு மதுரை வேளாண் தொழில் முனைவோா் உருவாக்கு மையம் உதவி வருகிறது என்றாா்.

இதைத்தொடா்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் என். குமாா், கணக்கு தணிக்கையாளரும் சுதேசி விழிப்புணா்வு இயக்கத்தின் தேசிய துணைப் பொறுப்பாளருமான ஆா்.சுந்தரம், சோஹோ நிறுவ தலைமை அதிகாரி தா்வேம்பு ஆகியோா் பேசினா்.

இந்த விழாவில் 25 விவசாயிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான கிஷான் கடன் அட்டை இந்தியன் வங்கி மூலம் வழங்கப்பட்டது. வேளாண் வணிக மேம்பாட்டு மைய இயக்குநா் பி. சிவக்குமாா், முனைவா் கே.பி.ராமசாமி, நபாா்டு தலைமை செயல் அலுவலா் செல்வராஜ், மதுரை வேளாண் கல்லூரி முதல்வா் வி.கே.பால்பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாடித்தோட்டங்களுக்குத் தேவையான நாட்டுப்பசு உரங்கள், விபூதி, இயற்கை உரங்கள், பயிா் ஊக்கிகள் ஆகியவை விவசாயிகள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com