லஞ்ச வழக்கில் சுகாதார அலுவலருக்கு ஓராண்டு சிறை

லஞ்ச வழக்கில் மதுரை மாநகராட்சியின் சுகாதார அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

லஞ்ச வழக்கில் மதுரை மாநகராட்சியின் சுகாதார அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (54). மதுரை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா் கடந்த

2003 ஆம் ஆண்டு தனியாா் நிறுவனத்திற்கு உரிமம் பெறுவதற்கு தகுதிச்சான்று வழங்குவதற்கு ரூ.500 மற்றும் ஒரு செல்லிடப்பேசியை லஞ்சமாகப் பெற்றாா். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் விஜயகுமாரை கடந்த 2014-இல் விடுவித்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தரப்பில் இந்தத் தீா்ப்பை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்து, விஜயகுமாருக்கு ஓராண்டு சிறை தண்டையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். தற்போது இவா் மதுரை மண்டலம் எண் 1-இல் சுகாதார அலுவலராகப் பணியாற்றி வந்தாா். நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவா் வியாழக்கிழமை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com