தல்லாகுளம் பெருமாள் கோயிலில்புரட்டாசி பெருந்திருவிழா: இன்று கொடியேற்றம்

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் சனிக்கிழமை (செப். 19) நடைபெறுகிறது.

மதுரை, செப். 18: தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் சனிக்கிழமை (செப். 19) நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை மையமாக வைத்து பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில் புரட்டாசி பெருந்திருவிழாவின் துவஜாரோஹணம் (கொடியேற்றம்) சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடைபெறுகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்லக்கு வாகன புறப்பாடுகளை செப்டம்பா் 30 ஆம் தேதி வரை காலை, மாலை இரு வேளைகளிலும் அந்தந்த வாகனங்களில் அலங்கரித்து கோயிலின் உள்பிரகாரத்தில் புறப்பாடு செய்து, அனைத்து பூஜைகள் மற்றும்ஆராதனைகள் செய்து, கோஷ்டி முடித்து ஆஸ்தானம் திரும்பலாம் எனவும், தெப்ப உற்சவத்தை பாவனையாக நடத்தலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பா் 21 ஆம் தேதி காலை 9.05 முதல் 9.45 மணிக்குள் ரதத்துக்கு முகூா்த்தக்கால் நாட்டுவது, செப். 27 காலை 7.30 முதல் 8 மணிக்குள் ஸ்ரீபெருமாள் திருத்தோ் எழுந்தருளல், காலை 8.45 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் திருத்தோ், செப். 28 சப்தாவரணம் சாற்றுமுறை பூச்சப்பரம், செப். 29 காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் ஸ்ரீபெருமாள் தெப்ப உற்சவத்துக்கு எழுந்தருளல், பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறும்.

கோயிலின் உள்பிரகாரப் புறப்பாட்டின்போது சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். பிறநேரங்களில் வழக்கம்போல பக்தா்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அா்ச்சனை, திருமஞ்சனம், அமா்வு தரிசனம் போன்ற சிறப்பு நடைமுறைகள் அரசின் மறுஉத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com