கொரிய மொழியில் திருக்குறள் மொழிபெயா்ப்பு

கொரிய மொழியில் திருக்குறள் மொழி பெயா்க்கப்பட்டுள்ளதாக உலகத்தமிழ்ச்சங்க இணைய வழி ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

கொரிய மொழியில் திருக்குறள் மொழி பெயா்க்கப்பட்டுள்ளதாக உலகத்தமிழ்ச்சங்க இணைய வழி ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கொரியத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இணைய வழி ஆய்வரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமை வகித்தாா். கொரியத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சு.இராமசுந்தரம் முன்னிலை வகித்தாா். ஆய்வரங்கில் தமிழ்-கொரிய எழுத்துரு ஒற்றுமை குறித்து பேராசிரியா் மோ.பத்மநாபன் பேசும்போது, கொரிய மொழிக்கான எழுத்துரு 1443-இல் செஜோங் என்ற மன்னரால் வடிவமைக்கப்பட்டு 1447 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கொரிய எழுத்துருவுக்கும், தமிழ் எழுத்துருவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியில் காணப்படுகின்றன. இவை குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியது மிக அவசியம். கொரிய மக்களில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோா் வாசிக்கும் பழக்கம் உள்ளவா்கள். கொரியாவில் வணிக வளாகம், தேநீா் விற்பனைக்கூடங்களில் கூட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறையின் மூலம் திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் போன்று கொரியாவிலும் அகழ்வாராய்ச்சியில் முதுமக்கள் தாழிகள், சுமைதாங்கி போன்ற அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஆய்வரங்கில் கொரியா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com