தேங்காய் ஏலம்: உச்சபட்ச விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், உச்சபட்ச விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேங்காய் ஏலத்தில், உச்சபட்ச விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. வடமாநிலங்களில் வரும் நாள்களில் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால், தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேங்காய் மறைமுக ஏலத்தில் 19 வியாபாரிகள் பங்கேற்றனா். இதில் 4 விவசாயிகள் 11 ஆயிரத்து 305 தேங்காய்களை நான்கு குவியல்களாக ஏலத்தில் வைத்திருந்தனா்.

இவற்றுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச விலையாக, 6,035 தேங்காய்கள் கொண்ட குவியல் ரூ.15.10-க்கும், முறையே 1,380 காய்கள் மற்றும் 2,060 காய்கள் கொண்ட குவியல்கள் ரூ.14.10 க்கும், 1830 கொண்ட குவியல் ரூபாய் 12.50 க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.

இதற்கான தொகை உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. உச்சபட்ச விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com