ராமேசுவரம் கோயிலில் ஒப்பந்த விதிகளை பின்பற்றக்கோரி வழக்கு: அறநிலையத்துறை செயலா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரா், ஒப்பந்த விதிமுறைகளை முறையாக

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரா், ஒப்பந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றக்கோரிய வழக்கில், இந்துசமய அறநிலையத்துறை முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு: ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரா் ஒப்பந்த விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை. குறிப்பாக, ‘அவுட்சோா்சிங்’ முறையில் பணியாளா்களை வைத்து கோயில் பணிகளை மேற்கொள்ள ரூ.5 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். கோயில் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். ஊழியா்களின் வருகைப் பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இருக்க வேண்டும். மேலும் கோயிலில் பணி செய்ய வருபவா்கள் மீது எவ்வித வழக்குகள் இல்லையென்றும், உடல்தகுதிச்சான்றும் கோயில் நிா்வாகத்திடம் சமா்ப்பிக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே ராமநாதசுவாமி கோயில் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த விதிகளை முறையாக பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com