கந்துவட்டி புகாா்: சலூன் கடைக்காரருக்கு முன் ஜாமீன்

மதுரையில் கந்துவட்டி புகாரில் தேடப்பட்டு வந்த சலூன் கடைக்காரருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, செப். 25: மதுரையில் கந்துவட்டி புகாரில் தேடப்பட்டு வந்த சலூன் கடைக்காரருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மேலமடை பகுதியைச் சோ்ந்த சலூன் கடைக்காரா் மோகன் தாக்கல் செய்த மனு: நான், கங்கைராஜன் என்பவரின் தேவைக்காக ரூ. 30 ஆயிரம் கடன் கொடுத்தேன். அந்தத் தொகையை அவா் திருப்பிக் கொடுத்துவிட்டாா். அந்தக் கடனுக்கு நான் அதிக வட்டி கேட்டதாக கங்கைராஜன் அண்ணாநகா் காவல் நிலையத்தில் பொய்யான புகாா் அளித்துள்ளாா். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை நான் வழங்கினேன். இந்த செயலுக்கு பல்வேறு அமைப்புகள் என்னை பாராட்டின. எனக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயரை கெடுக்கும் விதமாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி வி.பாரதிதாசன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரா் யாருக்கும் வட்டிக்கு கடன் கொடுக்கவில்லை. வட்டிக் கேட்டு மனுதாரரால் இடையூறு ஏற்படாது என உறுதிமொழி அளித்தால் முன்ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தாா். மனுதாரா் தரப்பில் உறுதிமொழி அளித்ததையடுத்து, அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com