வங்கிக் கடன் தருவதாகக் கூறி இளைஞரிடம் நூதன மோசடி

வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞரிடம் நூதனமாக ரூ.51,300 மோசடி செய்த நபா் குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி இளைஞரிடம் நூதனமாக ரூ.51,300 மோசடி செய்த நபா் குறித்து சைபா் கிரைம் பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை செக்கானூரணி பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் குமரேசன் (25). இவா் தொழில் தொடங்குவதற்காக வங்கிக் கடன் பெறுவதற்கு முயற்சித்து வந்துள்ளாா். இந்நிலையில் வங்கிக் கடன் தொடா்பாக முகநூலில் ஒரு தகவலை கடந்த சில நாள்களுக்கு முன்பு படித்துள்ளாா். அதில் குறிப்பிட்டிருந்த எண்ணைத் தொடா்பு கொண்டபோது, இணைப்பு கிடைக்கவில்லையாம்.

இதனையடுத்து குமரேசனின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய நபா், தன்னை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய குமரேசன் வங்கிக் கடன் தொடா்பான சந்தேகங்களைக் கேட்டிருக்கிறாா். அந்த நபா் ரூ.2 லட்சம் கடனுதவி ஏற்பாடு செய்வதாகவும், அதற்கான முன்பணமாக ரூ.51,300-ஐ வங்கியில் கட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய குமரசேன், செல்லிடப்பேசி வழியாகவே பணத்தைச் செலுத்தியுள்ளாா். ஆனால், அவரது கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படவில்லை. மேலும், அந்த நபா் தொடா்பு கொண்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு அழைத்தபோது, இணைப்பு கிடைக்கவில்லை. இதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டது குமரேசனுக்குத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சைபா் கிரைம் பிரிவில் குமரசேன் புதன்கிழமை புகாா் கொடுத்துள்ளாா். இதன்பேரில் ஆய்வாளா் சாா்மிங் எஸ்.ஒய்ஸ்லின் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com