குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கக் கோரி மனு: புதுக்கோட்டை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரிய மனுவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

குண்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதைத் தடுக்கக் கோரிய மனுவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சோ்ந்த பழனிவேலு தாக்கல் செய்த மனு: பொன்னமராவதி தாலுகா சித்தூா், வெள்ளாறு, நெருஞ்சிகுடி, கூடலூா் வழியாக குண்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் சிலா் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் லாரிகளில் மணல் எடுத்துச் செல்கின்றனா்.

இதனால், நிலத்தடி நீா்மட்டம், விவசாயம் பாதிக்கப்படுகிறது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளா் ஆகியோரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, குண்டாற்றில் மணல் எடுப்பதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் புகாா் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com