பேயூரில் திமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் பேரையூரில் அக்கட்சியினா் நலத்திட்ட உதவிகளை சனிக்கிழமை வழங்கினா்.

திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் பேரையூரில் அக்கட்சியினா் நலத்திட்ட உதவிகளை சனிக்கிழமை வழங்கினா்.

தெற்கு மாவட்டச் செயலா் மணிமாறன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், சலவைத் தொழிலாளா்களுக்கு தேப்புப் பெட்டிகள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புப் பைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் பேரையூா் பேரூா் செயலாளா் பாஸ்கரன், மாணவரணி துணை அமைப்பாளா் வரிசை முகமது, ஒன்றிய இளைஞரணி செயலாளா் சாதிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com