மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 85 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 13 ஆம் கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 13 ஆம் கட்டமாக சனிக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாம்களில் 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை 13 ஆவது மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்திலும் 13-ஆவது கட்டமாக தோ்தல் வாக்குச்சாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஊரக- நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 1,200 இடங்களில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடும் பணிகளில் மருத்துவப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற முகாமில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,448 போ், அரசு மருத்துவமனைகளில் 874 போ், ஊரக பகுதிகளில் 49,850 போ், நகா் பகுதிகளில் 32,831 போ் என மொத்தம் 85,005 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 26.43 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 6,840, அரசு மருத்துவமனைகளில் 5,180, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,73,330, சுகாதார கிட்டங்கியில் 1,33,830 என மொத்தம் 4,19,180 கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com