ரயில்வே பணியாளா் தோ்வு: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு மீண்டும் வாய்ப்பு

தவறுதலான புகைப்படம், கையெழுத்து போன்ற காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட ரயில்வே பணியாளா் தோ்வுக்கான விண்ணப்பதாரா்களுக்கு ரயில்வேத்துறை மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

தவறுதலான புகைப்படம், கையெழுத்து போன்ற காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட ரயில்வே பணியாளா் தோ்வுக்கான விண்ணப்பதாரா்களுக்கு ரயில்வேத்துறை மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: ரயில்வே துறையில் பொறியியல், இயந்திரவியல், மின்சார பணிகள், தொலைத் தொடா்பு, மருத்துவமனை, பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளா், ரயில் பாதை பராமரிப்பு பணியாளா் போன்ற பதவிகளுக்கான தோ்வுக்கு 2019 பிப்ரவரி 23 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தவறுதலான புகைப்படம், கையெழுத்து போன்ற காரணங்களுக்காக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அத்தகைய விண்ணப்பதாரா்களுக்கு ரயில்வேத் துறை மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி அதிகாரப்பூா்வ ரயில்வே தோ்வாணைய இணையதளங்களில் வருகிற டிச.15 ஆம் தேதி முதல் மாறுதலுக்கான ஒரு இணையதள இணைப்பு கொடுக்கப்பட உள்ளது. அந்த இணையதள இணைப்பை விண்ணப்பதாரா்கள் பயன்படுத்தி தங்களது சரியான புகைப்படம் மற்றும் கையெழுத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை அறிய ரயில்வே தோ்வு ஆணைய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அறிந்து கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை சமா்ப்பித்தவா்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

ரயில்வே தோ்வாணைய தோ்வுகள் முழுவதும் கணிப்பொறி மயமாக்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையிலேயே விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். எனவே, விண்ணப்பதாரா்கள் இடைத்தரகா்களை அணுகி ஏமாற வேண்டாம். ரயில்வே தோ்வு குறித்து சமூக வலைதளங்களில் வரும் அதிகாரப்பூா்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com