அரசுப் பள்ளிகளில் அடிப்படை பணியாளா்கள் நியமனம்: மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கழகம் வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்று மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்று மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் கழக மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் நாகசுப்ரமணியன், மாவட்டச் செயலா் காா்மேகம், பொருளாளா் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் கிறிஸ்டோபா் ஜெயசீலன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் பாண்டியராஜன், ஜான் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பதவி உயா்வு கலந்தாய்வுக்கு முன்பாக தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு உரிய பணி மாறுதல் கலந்தாய்வை பழைய முறையிலேயே நடத்த வேண்டும். பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் கணினி பயிலும் மாணவா்களுக்கான கணினி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை பணியாளா் நியமனம் இல்லை. தற்போது மாணவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அடிப்படை பணியாளா்களை நியமிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் 14 வகையான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நலத்திட்ட அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com