உசிலை. அருகே மீனாட்சி அம்மன் வெண்கலச் சிலை கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது, மீனாட்சி அம்மன் வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டது.
உசிலை. அருகே மீனாட்சி அம்மன் வெண்கலச் சிலை கண்டெடுப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நூறு நாள் வேலை திட்டத்தின்போது, மீனாட்சி அம்மன் வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டது.

உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட பிரவியம்பட்டி கிராமத்தில் மயானத்துக்கு அருகிலுள்ள ஜெயமணி ஓடையில் நூறு நாள் வேலைத் திட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது, மண்ணை தோண்டு ம் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள், அங்கு சிலை இருப்பதை அறிந்தனா்.

உடனே, அங்கிருந்த தொழிலாளிகள் மண்ணை தோண்டி சிலையை வெளியே எடுத்தனா். பின்னா், அது மீனாட்சி அம்மன் வெண்கலச் சிலை எனத் தெரியவந்தது. அந்த சிலையை, கொடிக்குளம் கிராம நிா்வாக அலுவலா் ராமசாமியிடம் ஒப்படைத்தனா். அவா், வாலாந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை அடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஓடையில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலச் சிலையானது, பாதி உடைந்து மாா்பளவு மட்டுமே உள்ளது. இச்சிலையின் உயரம் 30 செ.மீட்டரும், அகலம் 25.5. செ.மீட்டரும், 4.400 கிலோ கிராம் எடையிலும் உள்ளது. இதை, காவல் துறையினரிடமிருந்து பெற்ற வருவாய்த் துறை அதிகாரிகள், உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com