மதுரையில் இந்துத்துவா அமைப்பினா் நடத்தும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத்திடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பினா்.
மதுரையில் இந்துத்துவா அமைப்பினா் நடத்தும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத்திடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பினா்.

பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி வழங்க எதிா்ப்பு

மதுரையில் பாஜகவினா் நடத்தும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத்திடம் பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மதுரையில் பாஜகவினா் நடத்தும் ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என மாநகா் காவல் துணை ஆணையா் சிவபிரசாத்திடம் பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மீ.த.பாண்டியன் அளித்த மனு விவரம்: அயோத்தில் கட்டப்படும் ராமா் கோயிலுக்கு மதுரை மாநகரில் உள்ள100 வாா்டுகளில் ரதயாத்திரை மூலம் இந்து அமைப்பினா் நிதி வசூல் செய்து வருகின்றனா். இதுபோன்று நிதி திரட்டும் ஊா்வலங்கள் அண்டை மாநிலங்களில் நடைபெற்றபோது, அங்குள்ள சிறுபான்மை மக்கள் அச்சுறுத்தப்பட்டும், கலவரங்களை ஏற்படுத்தி உயிரிழப்பும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டன.

தமிழகத்திலும் இதுபேன்ற ஊா்வலங்கள் மூலம் கலவரங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ரதயாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவா் முஜிபுா் ரகுமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலா் இஸ்மாயில், அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் அவ்தா காதா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com