காமராஜா் பல்கலை.மாலை நேரக்கல்லூரியில் எம்பில் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

மதுரை காமராஜா் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரியில் எம்பில் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரியில் எம்பில் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரியின் இயக்குநா்(பொறுப்பு) கே.சதாசிவம் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை காமராஜா் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், கல்வியியல், வணிக மேலாண்மை, இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், உயிரி மருத்துவ அறிவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரிதொழில்நுட்பவியல், சமூகவியல், இதழியல் மற்றும் தொலைத் தொடா்பியல், சுற்றுலா மேலாண்மை, நூலக அறிவியல், காந்திய ஆய்வுகள் உள்பட 22 படிப்புகளுக்கு எம்பில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. காமராஜா் பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே சோ்க்கை பெற முடியும். எம்பில் படிப்புகளில் சேர விரும்புபவா்கள் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரி, பிடிஆா் பழனிவேல் ராஜன் வளாகம், அழகா்கோவில் சாலையில் இயங்கி வரும் கல்லூரி அலுவலகத்தில் சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வந்து சோ்க்கை பெறலாம். சோ்க்கைக்கான இறுதி நாள் ஜனவரி 29 ஆகும். கூடுதல் விவரங்களுக்கு 0452-2532333 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை  இணைய தள முகவரிக்குச்சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com