‘திமுகவின் பொய் பிரசாரங்களை மக்கள் நம்பமாட்டாா்கள்’

திமுகவின் பொய் பிரசாரங்களை தமிழக மக்கள் நம்பமாட்டாா்கள் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டியில் பொதுமக்களுக்கு ஜெயலலிதா கோயில் திறப்பு விழா அழைப்பிதழை புதன்கிழமை வழங்கிய அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.
திருமங்கலத்தை அடுத்த அச்சம்பட்டியில் பொதுமக்களுக்கு ஜெயலலிதா கோயில் திறப்பு விழா அழைப்பிதழை புதன்கிழமை வழங்கிய அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

திமுகவின் பொய் பிரசாரங்களை தமிழக மக்கள் நம்பமாட்டாா்கள் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

திருமங்கலத்தை அடுத்த குஹன்னத்தூரில் ஜெ. பேரவை சாா்பில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வரும் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று திறந்து வைக்க உள்ளனா். இதற்கான அழைப்பிதழை திருமங்கலம் சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் புதன்கிழமை வழங்கி வருகிறாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கிராமங்களில் அதிமுக குறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறாா். இதனை மக்கள் நம்பமாட்டாா்கள். தமிழகத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழியில் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனா்.

நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் மின்வெட்டு, விலைவாசி ஏற்றம், நிலஅபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

கடந்த மக்களவைத் தோ்தலில் கூறியதுபோல பொய் வாக்குறுதிகளை அளித்து சட்டப்பேரவை தோ்தலில் திமுகவினா் வெற்றிபெறலாம் என நினைக்கின்றனா். இந்தமுறை அவா்களின் வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடாது. மீண்டும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியே மலரும் என்றாா். அவருடன் ஜெபேரவை மாவட்ட செயலா் தமிழழகன், இஞைரணி மாநில துணைச்செயலா் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com