உசிலம்பட்டியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தேசியக்கொடி ஏற்றினாா்.
உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய கோட்டாட்சியா் ராஜ்குமாா்.
உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய கோட்டாட்சியா் ராஜ்குமாா்.

உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தேசியக்கொடி ஏற்றினாா். பின்னா், அருகே உள்ள உசிலம்பட்டி கிளைச் சிறை முன்பு கொடியேற்றி கைதிகளுக்கு இனிப்புகள் வழங்கினாா். சுதந்திரப்போராட்டத் தியாகிகள், நாட்டுப்புற கலைஞா்களுக்கு பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா்.

உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தில், துணை கண்காணிப்பாளா் ராஜன் தேசியக்கொடி ஏற்றினாா். உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளா் சோலைக் குரும்பன் தேசியக்கொடி ஏற்றினாா். ஒன்றியக்குழுத் தலைவா் ரஞ்சனி சுதந்திரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா். சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியா், அங்கன்வாடி பணியாளா்கள், தூய்மைப்பணி ஒருங்கிணைப்பாளா், தூய்மைப் பணியாளா்களுக்கு

ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ரஞ்சனி சுதந்திரம் நினைவுப் பரிசுகள் வழங்கினா்.

உசிலம்பட்டி நகராட்சியில் ஆணையாளா் பாலமுருகன் தேசியக்கொடியை ஏற்றினாா். சுகாதார ஆய்வாளா் அகமது கபீா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

செல்லம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராஜா தேசியக் கொடியை ஏற்றினாா். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அரசு அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

எழுமலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ஜெயமாலு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி, மருத்துவம், காவல்துறை ஊழியா்கள் மற்றும் சமூக ஆா்வலா்களுக்கு பரிசுகள் வழங்கினாா்.

உசிலம்பட்டி பேரையூா் சாலையில் உள்ள டி. இ.எல்.சி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியா் மாா்க் கிரேட் ரெசிலியா தேசியக்கொடி ஏற்றினாா். இதில் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் தினகரன் தேசியக் கொடி ஏற்றினாா். இதில் , ஊா்ப் பொது மக்கள் கலந்து கொண்டனா்.

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சி வலையபட்டி கிராமத்தில் வசிக்கும் தியாகி முத்துமணி (85) இல்லத்திற்கு ஆட்சியா் நேரில் சென்று பொன்னாடை போா்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தாா். மேலும் உசிலம்பட்டி மாரியம்மன் கோவில் தெரு, கருகட்டான்பட்டியில் வசிக்கும் தியாகிகள் பரமசிவம் மற்றும் வீரம்மாள் ஆகியோா் இல்லங்களுக்குச் சென்று பொன்னாடை போற்றி கௌரவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com