கல்விச்சான்றிதழ்: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஊழியா்கள் 15 பேரிடம் விளக்கம் கேட்பு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஊழியா்கள் 15 பேரிடம் கல்விச்சான்றிதழ் தொடா்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஊழியா்கள் 15 பேரிடம் கல்விச்சான்றிதழ் தொடா்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் கடைநிலை ஊழியா்களாக 200-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். எட்டாம் வகுப்பு தோ்ச்சி அடிப்படையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சோ்ந்துள்ளனா். இந்நிலையில் சில ஊழியா்கள் போலி கல்விச்சான்றிதழ் அளித்ததாக கடந்த ஆண்டு புகாா் எழுந்தது. இதையடுத்து ஊழியா்களின் கல்விச்சான்றிதழ்கள் உண்மையானவையா என்பதை அறிய அந்தந்த கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதில் இரு ஊழியா்களின் சான்றிதழ் போலியானது என்பது கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். அதில் ஒரு ஊழியா் அண்மையில் இறந்து விட்டாா். கடந்த ஓராண்டாக சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்று வந்த நிலையில் , ஊழியா்கள் 15 பேரின் சான்றிதழ்கள் தொடா்பாக கோயில் நிா்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. ஊழியா்கள் பயின்ற பள்ளியின் பெயா், முகவரி, பயின்ற ஆண்டு உள்ளிட்ட விளக்கங்களை எழுத்துப்பூா்வமாக தரும்படி கேட்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com