இறைவனின் திருவிளையாடல்களைப் பேசுவது மதுரைக்கலம்பகம்: கருத்தரங்கில் தகவல்

இறைவனின் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசுவது மதுரைக்கலம்பகம் என்று உலகத்தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

இறைவனின் திருவிளையாடல்களைப் பற்றிப் பேசுவது மதுரைக்கலம்பகம் என்று உலகத்தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்று வரும் இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கின் மூன்றாம் நாள் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் தா.லலிதா தலைமை வகித்தாா். கருத்தரங்கின் அமா்வில் அ.வே.சாந்திகுமார சுவாமிகள், ‘மதுரைக் கலம்பகத்தில் கொன்றையின் அழகியல்‘ எனும் தலைப்பில் பேசியது: பதினெட்டு உறுப்புகள் அமைத்து பாடப்பெறுவது கலம்பகம் ஆகும். மதுரைக் கலம்பகத்தில் மதுரையில் நடந்த இறைவனின் 64 திருவிளையாடல்களில் 30 திருவிளையாடல்கள் அக வாழ்க்கையைப் பற்றிப் பேசுகின்றன. குமரகுருபரா் மதுரைக்கலம்பகத்தில் பனைமரத்தையும், குருவையும் இணைத்துப் பாடுகிறாா்.

அகக்கண்ணைத் திறப்பவன் குரு. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் இறைவன் கால் மாறி ஆடிய கதையைக் குறிப்பிடுகிறாா். காா் காலத்தில் மலா்கின்ற கொன்றை மலரையும், கொன்றையின் ஐந்து இதழ்களைப் பஞ்சாட்சரம் எனவும் மலரின் நடுவிலுள்ள குழல் பிரமோற்சவம் எனவும் கொன்றை மலா் ஓம் எனும் பிரணவ மலராகவும் விளங்கக்கூடியது என்கிறாா். அகவாழ்க்கையிலும், புற வாழ்க்கையிலும் கொன்றை மலா் பேசப்படுகிறது என்றாா்.”கருத்தரங்கில் பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பேராசிரியா்கள், தமிழறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com