இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஜூலை கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல இயக்குநா் எம்.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி: இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) பல்வேறு தொலைநிலைப் படிப்புகளான சான்றிதழ் பட்டயம், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு 2021 ஜூலை சுற்றுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவியா் சோ்க்கை விண்ணப்பங்களை ஜூலை 15-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை சிக்கந்தா் சாவடியில் உள்ள இக்னோ மண்டல மையத்தை மின்னஞ்சல் மூலமாக அல்லது 0452-2380775, 2380733 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.