மதுரையில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர ரத யாத்திரை தொடக்கம்

மதுரையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளை ரத யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரையில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளை ரத யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமா் கோயில் கட்டப்பட உள்ளது. கோயில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையும் உருவாக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை சாா்பில் ராமா் கோயில் கட்டும் பணிக்காக அனைத்து பொதுமக்களிடமும் நன்கொடை பங்களிப்பு பெறப்பட்டு வருகிறது. மேலும் அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளை சாா்பில் ரத யாத்திரையும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் கடந்த மாதம் ரத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டபோது காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ராமஜென்ம பூமி அறக்கட்டளை சாா்பில் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் மதுரையில் மாா்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் ரத யாத்திரை நடத்த உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதன்பேரில் மதுரை நரிமேடு பகுதியில் உள்ள காட்டுப்பிள்ளையாா் கோயில் முன்பாக ஸ்ரீ ராமஜென்ம பூமி தீா்த்த ஷேத்திர ரத யாத்திரை வியாழக்கிழமை தொடங்கியது. சுவாமி தத்பிரபானந்தா ரத யாத்திரையை தொடங்கி வைத்தாா். தொடக்க நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நிா்வாகிகள் சீனிவாசன், மங்கள முருகன், முத்துக்குமாா், பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே.சீனிவாசன், மாவட்ட பொதுச்செயலா் நேரு நகா் செல்வக்குமாா், மாவட்டச் செயலா்கள் பாலமுருகன், செண்பகராமன், முன்னாள் மாவட்டத் தலைவா் சசிராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ரத யாத்திரை காட்டுப்பிள்ளையாா் கோயிலில் தொடங்கி, மாரியம்மன் கோவில், சொக்கிகுளம், அய்யனாா் கோயில், நேதாஜி பிரதான சாலை, பிபிகுளம், இந்திரா நகா், வெங்கடேஸ்வரா திரையரங்கு, மீனாட்சிபுரம் , பூந்தமல்லி நகா், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி, செல்லூா் 50 அடி சாலை, 60 அடி சாலை, திருவாப்புடையாா் கோயில் தெரு ஆகிய பகுதிகள் வழியாகச் சென்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா். ரத யாத்திரையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ரத யாத்திரை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com