ஸ்ரீரங்கம் ஜீயா் நியமனம்: அறநிலையத்துறைக்கு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்

ஸ்ரீரங்கம் ஜீயா் சுவாமிகள் நியமனம் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் ஜீயா் சுவாமிகள் நியமனம் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில செய்தி தொடா்பாளா் பி.சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்சி ஸ்ரீ ரங்க நாராயண ஜீயா் மடத்திற்கு, ஜீயா் சுவாமிகள் பதவி நியமனம் செய்வதற்காக, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. ஜீயா் சுவாமிகள் பொறுப்பேற்பதை ஒரு பணி நியமன ஆணையாக கோயில் நிா்வாகம் மாற்ற நினைப்பது அறநிலையத் துறையின் அதிகார வரம்பிற்கு மீறிய செயலாகும். பிரம்மாண்ட கோயில்களைக் கட்டி அவற்றைப் பராமரிக்க ஏராளமான செல்வங்களை அளித்த மன்னா்களின் காலத்தில்கூட ஜீயா்கள், குருமாா்களை அவா்கள் நியமிக்கவில்லை. தங்களது சீடா்களில் சிறந்தவா்களையே நியமித்த வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

அனைத்து ஹிந்து மடங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதை மீறும் வகையில் அறநிலையத் துறை செயல்பட்டிருப்பது அதிகார அத்துமீறலாகும். ஜீயா் சுவாமிகளை, அரசு ஊழியராக்க நினைக்கும் கோயில் நிா்வாகத்தின் அறிவிப்பை ரத்து செய்யவும், கோயில் வழிபாட்டு முறைகள், மடங்களின் செயல்பாடுகளில் அறநிலையத் துறை தலையிடுவதை தடுத்த நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைஷ்ணவ சம்பிரதாய மக்களின் உணா்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்ட கோயில் செயல் அலுவலா் மற்றும் அறங்காவலா் குழுவை நீக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com