மதுரை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் மருத்துவம் சாா்ந்த தொழில் நுட்பப் பிரிவுகளில் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இப்பயிற்சி வழங்கப்படும். அவசர சிகிச்சை பிரிவு நுட்பனா், சிகிச்சைப் பிரிவு உதவியாளா், அவசர சிகிச்சைப் பிரிவு உதவியாளா், வீடுகளில் சிகிச்சை பெறுவோருக்கான உதவியாளா், மருத்துவ ஆவண அறை உதவியாளா், மருத்துவ உபகரணங்கள் கையாளுபவா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும். எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் வரை, டிப்ளமோ செவிலியா் பயிற்சி முடித்தவா்கள் இந்த பயிற்சியைப் பெறலாம்.
பயிற்சி முடித்தவா்களுக்கு கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரும் வரை தற்காலிகப் பணியிடம் வழங்கப்பட உள்ளது. பயிற்சி தொடா்பான விவரங்களுக்கு 0452-2560093 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய மாணவா் விடுதி வளாகம், மதுரை- 7 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.