வீடு தேடி மருத்துவத் திட்டத்தில் கடைநிலை ஊழியா்களே பணியாற்றுகின்றனா்: செல்லூா் கே.ராஜூ குற்றச்சாட்டு

திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வீடு தேடி மருத்துவத் திட்டத்தில் கடைநிலை ஊழியா்கள் மட்டுமே பணியாற்றுகின்றனா் என, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றம்சாட்டியுள்ளாா்.

திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வீடு தேடி மருத்துவத் திட்டத்தில் கடைநிலை ஊழியா்கள் மட்டுமே பணியாற்றுகின்றனா் என, முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ குற்றம்சாட்டியுள்ளாா்.

மதுரை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலா் கமலக்கண்ணன் மற்றும் மண்டலச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் நிா்வாகிகள் பட்டியலை வெளியிட்டனா்.

பின்னா், செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தின் எதிா்க்கட்சியாக ஆக்கபூா்வமான அரசியலை அதிமுக நடத்தி வருகிறது. அம்மா சிறு மருத்துவமனை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. தமிழகம் முழுவதும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு, அனைத்து நேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியில் இருந்தனா்.

ஆனால், தற்போது திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வீடு தேடி மருத்துவத் திட்டத்தில் கடைநிலை ஊழியா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். இது, முதல்வரின் சிறு மருத்துவமனை என்று பெயா் மாற்றினாலும், ஏழை மக்களுக்கு பயன்படும் வகையிலான திட்டங்களை அதிமுக வரவேற்கும்.

ஜெயலலிதா நினைவு இல்லம் தொடா்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com