பொதுப்பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க பேரவைக் கூட்டம்

மதுரை உடன் ராமநாதபுரம் மாவட்ட பொதுப் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 100 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இயக்குநா் எஸ்.பி.காா்த்திகேயனிடம், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது

எல்லீஸ் நகரில் உள்ள சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சங்கத் தலைவா் சி.ஜே.கே.குணசேகரன் தலைமை வகித்தாா்.

இச்சங்கத்தில் 6 மாவட்டங்களில் அரசு ஊழியா்கள் 2,622 போ் உறுப்பினா்களாக உள்ளனா். உறுப்பினா்களுக்கு லாபத்தில் பங்குத் தொகையாக 14 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ.15 கோடியே 81 லட்சம் மத்திய கால கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் நிதியாண்டில், ரூ.270.47 லட்சம் லாபம் ஈட்டி மாவட்டத்திலேயே சிறந்த சங்கமாகச் செயல்பட்டு வருகிறது.

கூட்டத்தில் மேலாண்மை இயக்குநா் எஸ்.முருகன், செயலா் ஜே.தமிழ்வாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com