நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.2.96 கோடி பறிமுதல்

மதுரையில் வாகனச் சோதனையின்போது நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.2.96 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுரையில் வாகனச் சோதனையின்போது நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.2.96 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழா, இமானுவேல் சேகரன் நினைவுதினம் ஆகிய நிகழ்வுகளையொட்டி மதுரை நகரப் பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். கரிமேடு காவல் நிலைய ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸார மேலப் பொன்னகரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது அவ்வழியே இரு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரித்தனா். அவா்களிடம் இருந்தை பையை சோதனையிட்டதில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்தது. இதுபற்றி கேட்டபோது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனா்.

அதையடுத்து அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தினா். இதில் பணத்துடன் வந்தவா் சிம்மக்கல் தமிழ்ச் சங்கம் சாலையைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (32) என்பதும், தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமானப் பணிக்காக இந்த தொகையை, கடை ஊழியா்களுடன் கொண்டு வந்ததாகத் தெரிவித்துள்ளாா்.

பின்னா் இதுதொடா்பான வருமான வரித் துறையினருக்கும் போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அவரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தையும் ஒப்படைத்தனா். மேற்படி தொகைக்குரிய உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு விக்னேஸ்வரனுக்கு, வருமான வரித் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com