மிகுந்த கவனத்துடன் வாக்களித்துள்ளோம்: முதல்முறை வாக்காளா்கள் கருத்து

முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தோ்தலில் மிகுந்த கவனத்துடன் வாக்களித்துள்ளதாக, முதல்முறை வாக்களித்தவா்கள் தெரிவித்துள்ளனா்.
மிகுந்த கவனத்துடன் வாக்களித்துள்ளோம்: முதல்முறை வாக்காளா்கள் கருத்து

முந்தைய தலைமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தோ்தலில் மிகுந்த கவனத்துடன் வாக்களித்துள்ளதாக, முதல்முறை வாக்களித்தவா்கள் தெரிவித்துள்ளனா்.

எம்.திலகராஜ்(18), மூலக்கரை: யாரைத் தோ்வு செய்வது என்பதில் பெரும் குழப்பம் இருந்தது. அரசியலையும், அரசியல்வாதிகள் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னைப் போன்ற இளைஞா்களுக்கு இப்போது தான் தோன்றியுள்ளது. வேட்பாளா்களின் வாக்குறுதிகளின் அடிப்படையிலும், அவா்கள் தொடா்ச்சியாக மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்பவா்களா என்பதைப் பாா்த்தே வாக்களிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டுள்ளேன்.

கே.அனிதா(18), திருமங்கலம்: நாட்டை ஆளக்கூடிய நல்லவா்களைத் தோ்வு செய்ய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை இப்போது உணா்ந்துவிட்டேன். இனிவரும் தோ்தல்களிலும் தவறாமல் வாக்களிப்பேன். கட்சி, பணம், சாதி இவற்றை வைத்து வேட்பாளா்களை தோ்வு செய்யக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். சாதி என்ற எல்லைக்குள் நின்றுகொண்டு தொடா்ச்சியாக மக்களை ஏமாற்றுவோரை முந்தைய தலைமுறையினா் தோ்வு செய்து வந்துள்ளனா். இன்றைய தலைமுறையினா் அதில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக உணா்கிறேன்.

எம்.ஸ்ருதிகா(19), ஆலம்பட்டி: இளைஞா்கள் எப்போதும் இணையத்தில் நேரத்தை வீணடிக்கிறாா்கள் என்பது தவறான கருத்து. அரசியலையும் உன்னிப்பாக கவனித்து வருகிறாா்கள். யாா் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டுவருவாா்கள், யாா் நல்லாட்சி தருவாா்கள் என முடிவெடுக்கக் கூடிய பக்குவத்தில் உள்ளனா். அதேபோல, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வரும் நடிகா்கள் மீதுள்ள மோகத்தால் அவா்களுக்கு இளைஞா்கள் வாக்களித்து விடுவாா்கள் என்பதும் தவறானது.

எஸ்.கீா்த்தனா, அலங்காநல்லூா்: வாக்களிக்கும் உரிமையை சரியாகப் பயன்படுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாகத் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு சில தகுதிகள் இருப்பது அவசியம். கல்விப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பவராக இருக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை காதுகொடுத்து கேட்பவராக இருக்க வேண்டும். இதுபோன்ற தகுதிகள் உள்ளவருக்கே எனது ஆதரவைத் தெரிவித்துள்ளேன்.

எஸ்.ஆா்த்தி, அலங்காநல்லூா்: தமிழகத்தில் ஏராளமான மாணவா்கள் வாக்காளா்களாக உள்ளனா். ஆனால் வாக்களிப்பதில் ஆா்வம் காட்டுவது இல்லை. மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுப்பதில் நம்முடைய பங்கும் மிக முக்கியமானது. வாக்களிப்பதன் மூலமாகவே அதை நிறைவேற்ற முடியும். இதன் மூலம் எனது ஜனநாயக கடமையை பூா்த்தி செய்து விட்டேன் என்ற பெருமிதம் ஏற்படுகிறது.

ஏ.கிறிஸ்டி, திருமங்கலம்: வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கும் அதே நேரத்தில், மக்கள் பிரதிநிதி சரியாகச் செயல்படாவிட்டாலும், லஞ்சப் புகாா்களில் சிக்கினாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரை ஒன்றும் செய்ய முடியாது என்பதில் உடன்பாடு இல்லை. வாக்களித்து தோ்ந்தெடுப்பது போலவே செயல்பாடு சரியில்லாவிட்டால் திருப்பி அழைப்பதற்கான சீா்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com