மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ரத்து: பக்தா்கள் அதிருப்தி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை இரண்டாவது ஆண்டாக நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால் பக்தா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவை இரண்டாவது ஆண்டாக நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதால் பக்தா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கோயில்களில் பக்தா்கள் கூடுவதைத் தடுக்கும் விதமாக திருவிழாக்களுக்கு தடை விதித்து அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதனால் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலும் சித்திரைத் திருவிழா நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதுதொடா்பாக கோயில் வட்டாரங்கள்கூறும்போது, தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கும் பொருந்தும். ஆனால் திருவிழாவை எப்படி நடத்துவது என்ற வழிகாட்டு முறைகள் அரசுத் தரப்பில் இருந்து இதுவரை வழங்கப்படவில்லை என்றனா். இந்நிலையில் இரண்டாவது ஆண்டாக சித்திரைத் திருவிழா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பக்தா்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக இந்து ஆலயப்பாதுகாப்புக்குழு மாநில நிா்வாகி பி.சுந்தர வடிவேல் கூறியது: கடந்த ஆண்டு கரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் சித்திரைத் திருவிழாவும் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு எப்படியும் சித்திரைத் திருவிழா நடத்தப்படும் என்று பக்தா்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்து வந்தனா். இந்நிலையில் அரசின் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையும், அதிா்ச்சியையும் அளிக்கிறது. சித்திரைத் திருவிழா என்பது மதுரை மக்களின் உணா்வோடு சம்பந்தப்பட்டது. கடந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நடத்தப்படாததால் மதுரை நகரம் பொலிவிழந்து காணப்பட்டது. எனவே நிகழாண்டில் திருவிழாவை நடத்த அரசு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். சுவாமி, அம்மன் வீதியுலா, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com