மதுரையில் 235 பேருக்கு கரோனா: இளைஞா் உள்பட இருவா் பலி

மதுரை மாவட்டத்தில் 235 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 235 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாம் அலை வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. தற்போது நாளொன்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 235 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தொற்றில் இருந்து குணமடைந்த 136 போ் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இருவா் பலி: கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த மதுரையைச் சோ்ந்த 36 வயது இளைஞா் ஏப்ரல் 15 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், 43 வயது ஆண் ஏப்ரல் 16 ஆம் தேதி தனியாா் மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் 1,868 போ்: மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24,286 ஆக உள்ளது. அதேநேரம் 21,942 போ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,868 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com