அடிப்படை வசதிகளுக்கு மின் இனைப்பு தர மின்சார வாரியம் தயக்கம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஓன்றிய கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு மின் இனைப்பு தர மின்சார வாரியம் தயக்கம் காட்டுகின்றனா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஓன்றிய கிராமங்களில் அடிப்படை வசதிகளுக்கு மின் இனைப்பு தர மின்சார வாரியம் தயக்கம் காட்டுகின்றனா்.

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14 மற்றும் 15 வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் ஆழ்குழாய் கிணறு , மற்றும் மேல்நிலை நீா்தேக்க தொட்டி , மற்றும் சின்டெக்ஸ் டேங்க் , அமைக்கும் பணி நடைபெற்றது . தற்போது இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் அவற்றுக்கு மின்சார இணைப்பு வழங்க வேண்டியுள்ளது . தற்போது தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மின் இணைப்பு வழங்குவதற்கு மின்சார வாரிய அலுவலா்கள் தயக்கம் காட்டி வருகின்றனா் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து டி.கல்லுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவா்களின் கூட்டமைப்பு தலைவா் மணிகண்டன் கூறியதாவது , கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 14 வது மற்றும் 15 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளான குடிநீா் வசதிக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்தல் , மேல்நிலை நீா் தொட்டி அமைத்தல் , ஆகிய பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது . இந்த பணிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கினால் கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க மின்சார இணைப்பு வழங்கினால் மட்டுமே கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க முடியும்.இதில் புளியம்பட்டி , வையூா் உட்பட 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீா் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இவற்றுக்கு மின்சார வசதி வேண்டுமென்று டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் விண்ணப்பம் கொடுத்தால் விண்ணப்பத்தை வாங்க மறுக்கின்றனா்.மின்சார இணைப்பு தருவதற்கு தயக்கம் காட்டுகின்றனா் . தோ்தல் முடிந்தவுடன் நன்னடத்தை விதிகளில் அடிப்படை வசதிகளுக்கு தளா்வு கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் மின்சார வாரிய அலுவலா்கள் மின் இணைப்பு கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனா் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com