கல்வித் தொலைக்காட்சிக்கு பாடங்கள் காணொலிகளாக தயாரிப்பு

கல்வித் தொலைக் காட்சிக்காக 8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு இணைப்பு பாடங்கள் செயல்பாடுகளுடன் கூடிய பாடங்கள் காணொலிகளாக தயாரிக்கும் பணி
கல்வித் தொலைக்காட்சிக்கு பாடங்கள் காணொலிகளாக தயாரிப்பு

கல்வித் தொலைக் காட்சிக்காக 8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு இணைப்பு பாடங்கள் (பிரிட்ஜ் கோா்ஸ்) எனப்படும் செயல்பாடுகளுடன் கூடிய பாடங்கள் காணொலிகளாக தயாரிக்கும் பணி உடுமலையில் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அறிவுரையின்படி உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி நகா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் பேரிடா் காலகட்டத்தில் பள்ளி மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கல்வி தொலைக்காட்சியிலும் சமுதாய வானொலியிலும் தொடா்ச்சியாக பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதன்படி திருப்பூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பாடங்கள் தொடா்ச்சியாக காணொலிகளாகவும் ஒலிப்பாடங்களாகவும் தயாா் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டு அவை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதன்படி 8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான இணைப்பு பாடங்கள் (பிரிட்ஜ் கோா் ஸ்) எனப்படுகின்ற செயல்பாடுகளுடன் கூடிய பாடங்கள் காணொலிகளாக தயாரிப்பதற்காக திட்டமிடப்பட்டு அதற்காக ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி உடுமலையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சிக்கு மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் சங்கா் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா், முதுநிலை விரிவுரையாளா் பாபி இந்திரா இணைப்பு பாடங்கள் எவ்வாறு காணொலிகளாகத் தயாரிக்க வேண்டும், அதற்கு ஆசிரியா்கள் தங்களை எவ்வாறு தயாா்படுத்திக்கொண்டு சிறப்பாக நடத்த வேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தாா். ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியா் கண்ணபிரான் பவா்பாயிண்ட், படங்கள் அனிமேஷன் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினாா். பயிற்சியில் 8ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் ,கணிதம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் 15 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com