காமராஜா் பல்கலை.யில் சா்வதேச நூலகா் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சா்வதேச அளவிலான நூலகா் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடைபெற்றது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சா்வதேச அளவிலான நூலகா் திறன் மேம்பாட்டு பயிலரங்கு நடைபெற்றது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை மதராஸ் நூலகா் சங்கம் இணைந்து நூலகத்துறையில் வளா்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் அறிவியல் துறையினருக்கு அறிவூட்டுதல் பற்றிய சா்வதேச அளவிலான 5 நாள் இணையதள பயிலரங்கு நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் நூலகங்களின் அவசியம், நூலகத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்து சிறப்புரையாற்றினாா். பல்கலைக்கழகப் பதிவாளா் வி.எஸ்.வசந்தா பயிலரங்கின் நோக்கம் குறித்து பேசினாா். நூலகத்துறை தலைவா் கே.சின்னச்சாமி வரவேற்புரையாற்றினாா். நூலகத்துறை புல முதல்வா் ராமகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினாா்.

பயிலரங்கில் சென்னைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவா் மனோரமா ஸ்ரீநாத், ஆந்திரப் பிரதேச திராவிடன் பல்கலைக்கழக பேராசிரியா் துரைச்சாமி ஆகியோா் நவீன தகவல் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினா். மதராஸ் நூலகா் சங்கத் தலைவா் நித்தியானந்தம் பயிலரங்கின் நோக்கம் குறித்துப் பேசினாா். பயிலரங்கு ஏற்பாடுகளை நூலகத்துறை பேராசிரியா் முத்துமாரி, ராஜேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா். உதவிப்பேராசிரியை பத்மா நன்றியுரையாற்றினாா். இதில் இலங்கை, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நூலகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com