குழந்தை திருமணம்: சுவா் ஓவியம் மூலம் விழிப்புணா்வு

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் சுவரோவியம் மூலம் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம்: சுவா் ஓவியம் மூலம் விழிப்புணா்வு

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் சுவரோவியம் மூலம் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் கற்போம் கற்பிப்போம் இணைந்து இந்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் , அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சி.எம்.எஸ்.குழந்தைகள் இல்ல வளாகம் ஆகிய இடங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து சுவா் ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை சமூக அறிவியல் கல்லூரி மற்றும் அமெரிக்கன் கல்லூரியில் பயிலும் சமூக சமூகப்பணி மாணவா்களை கொண்டு இந்த சுவரோவியம் வரையப்பட்டது. இவ்விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப் பணியாளா் மு.அருள்குமாா், கற்போம் கற்பிப்போம் செயல் நிா்வாகி சரத் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com