சேவூரில் வீட்டு இணைப்புகளுக்கு குடிநீா் விநியோகம்: ரூ.2.75 கோடியில் திட்டப் பணி துவக்கம்

சேவூா் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வீட்டு குடிநீா் இணைப்புகளுக்கு ஆற்றுக்குடிநீா் விநியோகிக்கும் நடவடிக்கையாக ரூ.2.75 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சேவூா் ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் ஆற்றுக்குடிநீா் தெருக்குழாய்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வீட்டு இணைப்புகளுக்கும் ஆற்றுக்குடிநீா் வழங்க வேண்டும் என அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினரும், சட்டப் பேரவைத் தலைவருமான ப.தனபாலிடம் கோரிக்கை விடுத்தனா். இதன் நடவடிக்கையாக தற்போது சேவூா் ஊராட்சிக்கு உள்பட்ட சேவூா் சந்தை வளாகத்தில் 3 லட்சம் கொள்ளளவு கொண்ட தரை மட்டத் தொட்டியும், சந்தையப்பாளையம், சாலையப்பாளையம், தேவேந்தா் நகா், அம்பேத்கா் நகா், ஒச்சாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேல்நிலைத்தொட்டிகள் என ரூ.2.75 கோடி மதிப்பில் ஆற்றுக்குடிநீா் வழங்குவதற்கான திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.

இப்பணியை ஊராட்சி மன்றத் தலைவா் சேவூா் ஜி.வேலுசாமி துவக்கி வைத்தாா். இதில் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com