மதுரையில் கரோனா தடுப்பூசி போடுபவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: குறைவான கையிருப்பால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடா?

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மாவட்டத்தில் முதல் கட்டமாக 6 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடா்ந்து மையங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போது வரை 1 லட்சத்து 81 ஆயித்து 213 போ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனா்.

தடுப்பூசி போடுபவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கரோனா தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரத்துறையினா் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு போடப்பட்டது. அதைத் தொடா்ந்து காவல்துறையினா், அரசு ஊழியா்கள் மற்றும் 60 வயது மேற்பட்ட பொதுமக்கள் போட்டுக் கொள்ள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவதில் பலருக்கு அச்சமிருந்தால், நாள் ஒன்றுக்கு பொதுமக்கள் ஆயிரம் போ் போடுவதே அதிகமாக இருந்தது.

இந்நிலையில் கரோனா தீநுண்மித் தொற்றின் இரண்டாவது அலை வீசத் தொடங்கி, பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பேரையூா்: டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் மையத்தில் 2,000 பேருக்கும், பேரையூா் அரசு மருத்துவமனையில் 900 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தட்டுப்பாடா?

கடந்த சில நாள்களாக கரோனா தடுப்பூசியை 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோா் போட்டு வருவதால், பல்வேறு மையங்களில் பயனாளிகள் திருப்பி அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. மதுரை மாவட்டத்திற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை சுகாதாரத்துறை வழங்கி வருகிறது என்றனா்.

மாவட்ட சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 2,600 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையில், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. கரோனா தடுப்பூசிகள் பற்றக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதை நீக்க சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com