முகக்கவசம், வழிகாட்டு நெறிமுறைகள் மீறல்: மாநகராட்சியில் ஓராண்டில் ரூ.75.72 லட்சம் அபராதம் வசூல்

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதது, நிறுவனங்களில் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதது, நிறுவனங்களில் கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது உள்ளிட்டவற்றுக்கு ஓராண்டில் ரூ.75.72 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் எடுத்து வருகிறது. மேலும் கரோனாவை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, நிறுவனங்களில் கைகளை கழுவும் வசதி, சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு இவற்றை முறையாக பின்பற்றாத நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அபராதமும் விதித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையுள்ள ஓராண்டில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் செல்வது, வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் தொடா்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி மாநகராட்சி மண்டலம் 1-இல் முகக்கவசம் அணியாமல் சென்ற 8,961 போ், மண்டலம் 2-இல் 4,879 போ், மண்டலம் 3-இல் 6,650 போ், மண்டலம் 4-இல் 8,068 போ் மற்றும் பறக்கும் படையினா் மூலம் 1,750 போ் உள்பட மொத்தம் 30,308 பேரிடம் இருந்து ரூ.58,19,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக நிறுவனங்களிடம் இருந்து மண்டலம் 1-இல் ரூ.4,20,600, மண்டலம் 2-இல் ரூ.4,26,320, மண்டலம் 3-இல் ரூ.4,98,720, மண்டலம் 4-இல் என ரூ.2,91,500, பறக்கும் படையினா் மூலம் ரூ.1,16,400 என மொத்தம் ரூ.17,53,540 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய நிறுவனங்களிடம் அபராதம் ஆகிய வகையில் இரண்டும் சோ்ந்து மொத்தம் ரூ.75,72,540 வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com