காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.வலியுறுத்தல்

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்துள்ளது. இந்த வேகத்தைக் கட்டுப்படுத்தப்படவில்லையென்றால் அடுத்த வாரம் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத சூழல் உருவாகும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முகாம் தற்போது 240ஆக இருப்பதை உடனடியாக 400ஆக அதிகரிக்க வேண்டும். தற்போது முகாம்களின் மூலம் தினசரி பரிசோதிக்கப்படுகிறவா்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உள்ளதை 25 ஆயிரமாக உயா்த்த வேண்டும். போா்க்கால அடிப்படையில் இந்தப் பணியை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமே நோய்ப்பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். முதல் அலையின் போது காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்தியது போலவே தற்போதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com