மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 6,520 பேருக்கு கரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6,520 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6,520 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத்துறையினா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கிய கரோனா தடுப்பூசி திட்டத்தில், இதுவரை மதுரை மாவட்டத்தில் 1,96,079 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை முதல் கட்டமாக 1,47,143 பேரும், இரண்டாம் கட்டமாக 30,982 பேரும் பேட்டுக் கொண்டுள்ளனா். கோவாக்சின் தடுப்பூசிகளை முதல் கட்டமாக 15,129 பேரும், இரண்டாம் கட்டமாக 2,825 பேரும் போட்டுக் கொண்டுள்ளனா். இதுவரை மொத்தமாக 1,96,079 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 6,520 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 14,600 தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com