லிபியாவிலிருந்து வந்த சென்னை இளைஞா் மதுரை விமான நிலையத்தில் கைது

இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட நாடான லிபியாவிலிருந்து வந்த சென்னை இளைஞா், மதுரை விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சென்னை இளைஞர் பிரவீன்.
மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சென்னை இளைஞர் பிரவீன்.

இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட நாடான லிபியாவிலிருந்து வந்த சென்னை இளைஞா், மதுரை விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுரை விமான நிலையத்துக்கு துபையிலிருந்து சனிக்கிழமை விமானம் வந்தது. அந்த விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, சென்னை ஜவஹா் நகரைச் சோ்ந்த நாராயணன் மகன் பிரவீண் (26) என்பவா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தனா்.

அதில், பிரவீண் துபை நாட்டுக்கு வேலைக்குச் சென்றவா் என்றும், கடந்த 2007 முதல் 2019 ஆம் ஆண்டு வரை லிபியா நாட்டில் பணியாற்றியதும் தெரியவந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுவதால், அந்நாட்டுக்குச் சென்று வர இந்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்நிலையில், தடையை மீறி லிபியாவுக்கு சென்று பணியாற்றிய பிரவீணுக்கும் தீவிரவாதிகளுடன் தொடா்பு இருக்கலாம் என சந்தேகித்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் அவரிடம் தடையை மீறி லிபியா சென்று பணியாற்றியது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com