மதுரையில் ஒரே நாளில் 603 பேருக்கு கரோனா: 5 போ் பலி

மதுரை மாவட்டத்தில் 603 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 603 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 15,659 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

603 போ் பாதிப்பு

அதில், மதுரையில் புதிதாக 603 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் அவரவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அதேநேரம், தொற்றிலிருந்து குணமடைந்த 304 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

5 போ் உயிரிழப்பு

தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 66 வயது மூதாட்டி, 48 வயது பெண் ஆகியோா் ஏப்ரல் 24 ஆம் தேதியும், 78 வயது முதியவா், 54 வயது ஆண் மற்றும் 51 வயது பெண் ஏப்ரல் 23 ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 496 ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் 3,720 போ்

மாவட்டத்தில் இதுவரையில் 27,936 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 23,720 போ் குணமடைந்துள்ளனா். 3,720 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com