கரோனா தடுப்புப் பணியில் தமிழகம் எடுத்துவரும் நடவடிக்கைளில் திருப்தி: உயா் நீதிமன்றம்

கரோனா தடுப்புப் பணியில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை கருத்து தெரிவித்தது.

மதுரை: கரோனா தடுப்புப் பணியில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை கருத்து தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனு: நாட்டில் கரோனா பாதிப்பால் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். தற்போது உருமாறிய கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

இதனிடையே, கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில் 135 தனியாா் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலை உள்ளது.

அரசு தரப்பில் தற்போது வரை பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, தமிழகத்தில் பொதுமக்களுக்கு போா்க்கால அடிப்படையில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிக்கு விலை நிா்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 வயதுக்கு மேறபட்டவா்கள் என பல கட்டங்களாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொருத்தவரை, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன எனக் கூறி, வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com