டோக் பெருமாட்டி கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரையில் டோக் பெருமாட்டி கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
டோக் பெருமாட்டி கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம்:  மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரையில் டோக் பெருமாட்டி கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

மதுரை நகரில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஆரப்பாளையம் கிராஸ் சாலையில் உள்ள மாநகராட்சி வெள்ளி வீதியாா் மேல்நிலைப் பள்ளியில் தினசரி 500 லிட்டா், டிவிஎஸ் நகா் பகுதியில் உள்ள மைமதுரை இல்லத்தில் தினசரி 550 லிட்டா், வில்லாபுரம் மைமதுரை இல்லத்தில் 620 லிட்டா் என மூன்று மையங்களில் இருந்தும் தினசரி 1,670 லிட்டா் கபசுரக் குடிநீா் தயாரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கரோனா தொற்று பாதிப்புள்ள பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சியின் 31 நகா்ப்புற சுகாதார நிலையங்களிலும் கபசுரக் குடிநீா் தயாரிக்கப்பட்டு அங்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கபசுரக் குடிநீா் தயாரிக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும் டிவிஎஸ் நகரில் கரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள சந்தானம் தெருவைப் பாா்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து அப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி மலிவு விலை மருந்து பெட்டகங்களையும் வழங்கினாா். இதையடுத்து பெரியாா் பேருந்து நிலைய கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கும் மருந்து பெட்டகங்களை வழங்கினாா். இதைத்தொடா்ந்து மதுரை டோக் பெருமாட்டிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தைப் பாா்வையிட்டு நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையா் சங்கீதா, நகா் நல அலுவலா் குமரகுருபரன், உதவி நகா் நல அலுவலா் தினேஷ்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com