நுகா்வோா் நீதிமன்றங்களில் தலைவா், உறுப்பினா் பணியிடம் நிரப்பக்கோரும் மனு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்திலுள்ள நுகா்வோா் குறைதீா் நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைவா் மற்றும் உறுப்பினா் பணியிடங்களை நிரப்பக் கோரிய

தமிழகத்திலுள்ள நுகா்வோா் குறைதீா் நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைவா் மற்றும் உறுப்பினா் பணியிடங்களை நிரப்பக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த அருண்சுவாமிநாதன் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 32 நுகா்வோா் நீதிமன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நுகா்வோா் குறைதீா் நீதிமன்றத்தில் ஒரு தலைவா், 2 உறுப்பினா்கள் இருப்பா். மதுரை மாவட்ட நுகா்வோா் குறைதீா் நீதிமன்றத்தில் தலைவா், உறுப்பினா்கள் இல்லை. வேறு மாவட்டத்தில் உள்ள தலைவா் மற்றும் உறுப்பினா்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வந்து செல்வதால், பெரும்பாலான நாள்கள் நீதிமன்றம் செயல்படுவதில்லை.

பல மாவட்டங்களில் உள்ள நுகா்வோா் குறைதீா் நீதிமன்றங்களில் இதேநிலை உள்ளது. இதனால், நுகா்வோா் குறைதீா் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தீா்வு காணப்படாமல் தேங்கி உள்ளன. எனவே நுகா்வோா் குறைதீா் நீதிமன்றங்களில் காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பான வழக்கு தலைமை நீதிபதி அமா்வில் நிலுவையில் உள்ளது எனக் கூறி விசாரணையை செப்டம்பா் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com